தனது பிறந்தநாளன்று கேக் வெட்டத் தேவையில்லை, கால்வாய் வெட்ட வேண்டிய நேரம் இது என்று நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
கேளம்பத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பில் நடிகர் கமல் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அதில் குறித்து கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் கட்சி தொடங்க ரசிகர்களிடம் பணம் சேகரிப்பேன் என்று கமல் கூறியது அரசியலில் சிலர் மட்டும் கடைபிடிக்கும் யுக்தி ஆகும்.
அதோடு, பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று கமல் வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், நவம்பர் 7-ம் தேதி கேக் வெட்ட தேவையில்லை. இது கால்வாய்களை வெட்ட வேண்டிய நேரம் என்று தெரிவித்தார்.