22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக 14 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. நாடாளுமன்ற மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதி இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் தொடர்பாக இந்தியா டுடே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அந்தக் கருத்துக் கணிப்பில், திமுக 14 இடங்களையும், அதிமுக 3 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 5 இடங்களில் கடுமையானப் போட்டியிருக்கும் என்று அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகின்றது.