டிரெண்டிங்

திமுக போராட்டத்திற்கு தொல்.திருமாவளவன் ஆதரவு

திமுக போராட்டத்திற்கு தொல்.திருமாவளவன் ஆதரவு

Rasus

நீட் நுழைவுத் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி திமுக நடத்தும் மனித சங்கிலிப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என அதன் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதாக கூறியுள்ள தொல்.திருமாவளவன், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், பொது மக்களும் திராளாக பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். நீட் தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி, தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசையும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, நீட் தேர்வில் தமிழகத்தில் விலக்கு அளிக்கக் கோரி வரும் 27-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்போவதாகவும், அதில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என திமுக நேற்று அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.