டிரெண்டிங்

கருணாநிதியின் முரசொலி விசிட்: வீடியோ வெளியிட்டது திமுக

கருணாநிதியின் முரசொலி விசிட்: வீடியோ வெளியிட்டது திமுக

webteam

முரசொலி கண்காட்சி அரங்கை திமுக தலைவர் கருணாநிதி பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை திமுக வெளியிட்டுள்ளது.

அதில் கருணாநிதி கண்காட்சி அரங்கினை பார்வையிடுவதும், ஸ்டாலின் உள்ளிட்டோர் அங்கு வைக்கப்பட்டுள்ள படங்கள் குறித்து அவருக்கு விளக்குவதும் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒரு ஆண்டாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆகவே பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முரசொலி பவளவிழா கண்காட்சி அரங்கை காண சென்றார். அங்கே அமைக்கப்பட்டுள்ள வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றாக பார்வையிட்டார். இருபது நிமிடங்களை அங்கு செலவிட்ட பின் அவர் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.

ஓராண்டுக்கு பிறகு கருணாநிதி பொது வெளிக்கு வந்தது திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.