டிரெண்டிங்

'எமர்ஜென்சியையே பார்த்தவன் நான்; ஐடி ரெய்டுக்கெல்லாம் பயப்படாது திமுக' - மு.க.ஸ்டாலின் 

'எமர்ஜென்சியையே பார்த்தவன் நான்; ஐடி ரெய்டுக்கெல்லாம் பயப்படாது திமுக' - மு.க.ஸ்டாலின் 

JustinDurai

'வருமான வரித்துறை மூலம் அதிமுகவை மிரட்டுவது போன்று திமுகவை பாஜகவால் மிரட்ட முடியாது' என்று தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். 

சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகன் மகன் கார்த்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினரின் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடத்துகின்றனர்' என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'மிசாவையே பார்த்த நான் வருமான வரித்துறை சோதனைக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன். வருமான வரித்துறை மூலம் அதிமுகவை மிரட்டுவது போன்று திமுகவை பாஜகவால் மிரட்ட முடியாது. இன்னும் 3 நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வருமான வரித்துறையை வைத்து எங்களை முடக்க முடியாது. மக்களிடம் ஆதரவில்லை; படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல. உங்கள் தப்புக்கணக்குக்கான தெளிவான பதிலை மக்களே ஏப்.6-இல் வழங்குவர்'' என்று கூறினார்.