டிரெண்டிங்

மார்ச் 15-இல் திமுக எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம்

மார்ச் 15-இல் திமுக எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம்

rajakannan

மார்ச் 15 ஆம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆம் தேதில் மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் உள்ளிட்டவை அரசியல் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 15ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.