சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 8ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், பல்வேறு பகுதிகளில் ஆளுநர் மேற்கொண்டு வரும் ஆய்விற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து நிலையில், அவரது உரையை புறக்கணிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக காலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும்படி மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.