டிரெண்டிங்

பரிசீலனை என்றாலே நடவடிக்கையில்லை என அர்த்தம் - திமுக

பரிசீலனை என்றாலே நடவடிக்கையில்லை என அர்த்தம் - திமுக

webteam

தமிழக அரசு பரிசீலனை செய்வதாக கூறும் எந்த விவகாரங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் குற்றம்சாட்டினார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன், அதிமுக அரசு அனைத்து விவகாரங்களிலும் காலம் தாழ்த்துவதாக குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேச முயன்றால், அனைத்து பிரச்சனைகளுக்கும் பரிசீலிக்கப்படும் என்ற ஒற்றை வார்த்தையில் அதிமுக அமைச்சர்கள் பதிலளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பரிசீலனை என்றாலே அதிமுக ஆட்சியில் நடவடிக்கை இல்லை என்று தான் அர்த்தம், அனைத்து அதிமுக  அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் இந்த ஒரு வார்த்தையையே வைத்து ஆட்சி செய்து வருவதாகவும் ஜெ.அன்பழகன் குற்றஞ்சாட்டினார்.