டிரெண்டிங்

“வாரிசு அரசியல் மாறி குடும்ப அரசியல் நடக்கிறது” : எம்.எல்.ஏ கு.க.செல்வம்

“வாரிசு அரசியல் மாறி குடும்ப அரசியல் நடக்கிறது” : எம்.எல்.ஏ கு.க.செல்வம்

webteam

தமிழகத்தில் வாரிசு அரசியல் மாறி குடும்ப அரசியல் நடப்பதாக திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் இன்று சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு ராமர் உருவ படத்திற்கு மரியாதை செய்த அவர், பின்னர் விபி துரைசாமி, கரு.நாகராஜன், எம்.என்.ராஜா, கே.டி.ராகவன் உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மோடி, ஜே.பி.நட்டா மற்றும் முருகன் ஆகியோருக்கு நன்றி. நான் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர்களிடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு மின் தூக்கி கேட்டேன். தமிழகத்தில் வாரிசு அரசியல் நடக்கிறது. திமுக உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். முருகனை பற்றி தவறாக பேசியவர்களை திமுக தலைவர் கண்டிக்க வேண்டும். கட்சியை விட்டு நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை. தமிழகத்தில் வாரிசு அரசியல் மாறி குடும்ப அரசியல் நடக்கிறது” என்றார்.

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த விபி துரைசாமி பேசும்போது, “கு.க செல்வம் பாரதிய ஜனதா கட்சியில் இணைய வில்லை. இந்தியாவில் எப்படி பாஜக காங்கிரஸ் குடும்ப கட்சியை எதிர்க்கிறோதோ, அதேபோன்று தமிழகத்தில் திமுக குடும்ப கட்சியை தமிழக பாஜக எதிர்க்கும்” என்றார்.