டிரெண்டிங்

மக்கள் பிரச்னையில் அரசுக்கு அக்கறையில்லை: மு.க.ஸ்டாலின்

மக்கள் பிரச்னையில் அரசுக்கு அக்கறையில்லை: மு.க.ஸ்டாலின்

webteam

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட மக்கள் பிரச்னைகள் மீது அரசு அக்கறை காட்டவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,’போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் சூழல் வரும். சட்டமன்றத்தைக் கூட்டுவது பற்றி ஆளுநர் கவலைப்படவில்லை. பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் அணியினரை தகுதிநீக்கம் செய்யாத சபாநாயகர், வாக்கெடுப்பே நடக்காத நிலையில் தினகரன் அணி எம்எல்ஏக்களை நீக்கியிருக்கிறார். எனவே, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். டெங்குவை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை.டெங்குவால் பாதிப்பு ஏற்படுவதைப்பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி அரசு குதிரைபேரத்தின் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கவும், ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் அக்கறை காட்டுகிறது’என்று கூறினார்.