டிரெண்டிங்

ஆளுநரை 10ஆம் தேதி சந்திக்கிறது தி.மு.க

ஆளுநரை 10ஆம் தேதி சந்திக்கிறது தி.மு.க

webteam

முதலமைச்சருக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக மேலும் 3 எம்.எல்.ஏக்கள் கடிதம் அளித்துள்ள நிலையில், வரும் 10ஆம் ஆளுநரை சந்திக்க தி.மு.கவினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என 19 எம்.எல்.ஏக்கள் கடிதம் அளித்திருந்த நிலையில், தற்போது மேலும் 3 எம்.எல்.ஏக்கள் முதலமைச்சருக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக, ஆளுநரை சந்தித்து தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் வரும் 10ஆம் தேதி ஆளுநரை சந்திக்க தி.மு.க தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஜனநாயகத்தை காக்கும் வகையில் உரிமைக் குழு நோட்டீஸ் தொடர்பான தீர்ப்பு வந்திருப்பதாகவும், அதனை வரவேற்பதாகவும் கூறினார். 

தற்போது நடைபெறும் ஆட்சிக்கு உரிமை குழுவிலும் பெரும்பான்மை இல்லை, ஆட்சியிலும் பெரும்பான்மை இல்லை என அவர் விமர்சித்தார். பெரும்பான்மையை இழந்திருக்கும் தமிழக அரசு, அதுவாகவே முன்வந்து ராஜினாமா செய்யவேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.