டிரெண்டிங்

திமுகவினர் நாளை போட்டி சட்டப்பேரவைக் கூட்டம்

திமுகவினர் நாளை போட்டி சட்டப்பேரவைக் கூட்டம்

Rasus

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை போட்டி சட்டப்பேரவைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை ஏற்படுத்திக்கொண்டு சட்டப்பேரவையில் நிகழும் அலுவல்களை நிகழ்த்த உள்ளனர். இதில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து திமுக உறுப்பினர்கள் விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே போன்ற ஒரு போட்டி சட்டப்பேரவைக் கூட்டத்தை திமுகவினர் நடத்தினர். தற்போது தூத்துக்குடி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்துள்ள நிலையில் போட்டி பேரவைத் தொடர் நடத்த திமுகவினர் முடிவெடுத்துள்ளனர்.