திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முதல் பிரதியை துரைமுருகன் பெற்றுக்கொண்டார். தேர்தல் வாக்குறுதியில் 500 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
1. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
2. சொத்துவரி அதிகரிக்கப்படாது.
3. ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்
4. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் 4 ரூபாயும் குறைக்கப்படும்.
5. எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
6. மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்துமுறை அமல்படுத்தப்படும்.
7. அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்கப்படும்.
8. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்
9. பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
10. ரேஷனில் உளுத்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்
11. இந்து கோயில்களை சீரமைக்கவும் குடமுழக்கம் 1000 கோடி ஒதுக்கப்படும்
12. மசுதி, தேவாலயங்களை சீரமைக்க 200 கோடி ஒதுக்கப்படும்
13. பத்திரிக்கையாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்
14. நடைப்பாதை வாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் திறக்கப்படும்
15. விவசாயிகளுக்கு மோட்டார் வாங்க 10,000 ரூபாய் வழங்கப்படும்.
16. தொழில்நிறுவனங்களில் 75 சதவீதம் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்
17. மகளிருக்கான பேறுகால விடுமுறை காலம் 12 மாதமாக உயர்த்தப்படும்
18. நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்
19. தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
20. 200 தடுப்பணைகள் அமைக்கப்படும்
21. ஏழைகளுக்கு உணவு வழங்க 500 ‘கலைஞர்’ உணவகங்கள் ஏற்படுத்தப்படும்.
22. சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிப்பரப்பபடும்.
23. தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு ஒதுக்கப்படும்.
24. மீனவர்கள் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
25. வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்.
26. அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை பால் வழங்கப்படும்.
27. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்:
28. 8 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக மாற்றப்படும்.
29. அரசு பள்ளியில் மாணவிகளுக்கு நாப்கின் வழங்கப்படும் .
30. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2500 ஆக உயர்த்தப்படும்.
31. மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டுறவு சங்க கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
32. மாணவர்களின் கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
33. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும்.
34. ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்.