டிரெண்டிங்

புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் : மு.க ஸ்டாலின்

புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் : மு.க ஸ்டாலின்

webteam

புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்று சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை திரும்பப் பெற்றது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. பின் பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்‌பட்டு, தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த வெள்ளியன்று தொடங்கியது. பரபரப் பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே கூடிய சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை திமுக கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் தனபால் மீது கொடுத்த தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த மாட்டோம். மேலும் இது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 

இந்நிலையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை திரும்பப் பெற்றது தொடர்பாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றும் புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்றும் கூறினார். விக்ரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.