திமுகவின் வளர்ச்சியை மென்மேலும் மேம்படுத்த கட்சியின் பொதுச் செயலாளரான பேராசிரியர் க. அன்பழகன் தந்தையை போல் துணை நிற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அன்பழகனின் 97 வது பிறந்த நாளையொட்டி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவுடைமைக் கொள்கையை நிலைநாட்டிய கார்ல் மார்க்சுக்கு உற்ற துணையாக விளங்கிய ஏங்கல்ஸ் போல, சமூக நீதிக்கொள்கையை நிலைநாட்டிட மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு உற்ற துணையாக எப்போதும் உடன் இருந்தவர் அன்பழகன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் பிறந்த நாளில், புயல் பாதித்த இடங்களில் நிவாரணப் பணிகளையும் எளிய மக்களுக்கான நல உதவிகளையும் திமுகவினர் வழங்கி சிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். திராவிடத் தத்துவ ஆசான் பேராசிரியர் அன்பழகன், நூற்றாண்டை கடந்தும் நம் அனைவரையும் வழிநடத்தும் விழிகளாக விளங்கிட விரும்புவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.