டிரெண்டிங்

எடப்பாடி பழனிசாமி வாக்குச்சாவடியில் திமுகவிற்கு அதிக வாக்குகள்

webteam

எடப்பாடி தொகுதி சிலுவம்பாளையத்தில் முதல்வர் பழனிசாமி வாக்களித்த வாக்குமையத்தில் அதிமுகவை காட்டிலும் திமுக 800 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அப்போது வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். அஜித், விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையைாற்றினர். 

இதைத்தொடர்ந்து சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில், வரிசையில் நின்று முதலமைச்சர் பழனிசாமி வாக்களித்தார். சாலையில் தனி ஆளாக நடந்து வந்த முதலமைச்சர் பழனிசாமி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். முதலமைச்சரின் இத்தகைய செயல் பொதுமக்கள் மத்தியில் மிகவும் வைரலாகியது. 

இந்நிலையில், இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலும், தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து நேற்று தேர்வு முடிவுகள் அறிவிக்கபட்டது. இதில் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 38 திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 ல் 13 திமுகவும் 9 அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. 

அந்தவகையில் எடப்பாடி தொகுதி சிலுவம்பாளையத்தில் முதல்வர் பழனிசாமி வாக்களித்த வாக்குமையத்தில் அதிமுகவை காட்டிலும் திமுக 800 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.