டிரெண்டிங்

25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன் : துரைமுருகன்

25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன் : துரைமுருகன்

webteam

25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  

இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23-ல் நடைபெறும். அரவக்குறிச்சி மற்றும் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22ம்தேதி முதல் 29ம்தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. 

இந்நிலையில் சூலூர் சட்டமன்ற தொகுதி  திமுக வேட்பாளரை ஆதரித்து  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் கலைந்து கொண்டனர். அப்போது பேசிய துரைமுருகன், “25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன். கருணாநிதியிடம் இருந்து ராஜதந்திரத்தை ஓரளவு கற்றுள்ளேன். அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு ஸ்டாலின் கையில் தான் தமிழகம் இருக்கும். கண்டிப்பாக 5 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் அதிமுகவுக்கு இருக்கிறது. கோவை மாவட்ட மக்கள் பணத்திற்கு விலை போக மாட்டார்கள். சூலூர் தொகுதி மக்கள் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்” எனப் பேசினார்.