டிரெண்டிங்

20ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு

20ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு

webteam

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கும் தேதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 20ஆம் தேதி கட்சியின் செயல் தலைவர் முக. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் மற்றும் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர் கேநகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31க்குள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. முன்னதாக பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்து எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.