டிரெண்டிங்

15 ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 

15 ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 

webteam

வரும் 15 ஆம் தேதி திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடைபெறும் என க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அண்ணா அறிவாலயத்தில் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அன்பழகன் தெரிவித்துள்ளார். வேலூரில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுவதால் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே வேலூரில் உள்ள 6 சட்டமன்றத்தொகுதிகளும் திமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சில இடங்களில் வேலையை ஆரம்பித்துவிட்டனர். வேலூர் தொகுதியில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத்தொகுதி தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருந்ததது குறிப்பிடத்தக்கது. 

நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் களத்தில் பணியாற்றவில்லை என்றால் அவர்களின் பதவிகள் பறிக்கப்படும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.