ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்காக திமுக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக ஆர்.கே.நகர் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர் இதனைக் கூறினார். மேலும், மதுசூதனன் வெற்றிபெற்றால் ஆர்.கே. நகர் முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும் என அவர் கூறினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றியவர் என்றும், திமுக அதிகாரத்தில் இருந்த காலத்தில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏன் ஒன்றும் செய்யவில்லை என்றும் வினவினார்.
மேலும், ஆட்சி அதிகாரத்தை டிடிவி தினகரன் குறுக்கு வழியில் கைப்பற்ற நினைப்பதாகவும், அவரை ஆர்.கே. நகர் மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறினார்.