டிரெண்டிங்

"கோவை அமைதி பூங்கா.. இங்கே கலவரம் செய்யக் கூடாது" - திமுக மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

"கோவை அமைதி பூங்கா.. இங்கே கலவரம் செய்யக் கூடாது" - திமுக மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

kaleelrahman

கோவை கொடிசியா மைதானத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசினார்.

அப்போது ஸ்டாலின் பொறுப்பேற்று ஆட்சிக்கு வந்த 8 மாத காலத்தில் மக்களுக்கு என்ன செய்தார். குறிப்பாக கோவைக்கு எந்த திட்டமும் வரவில்லை. ஊடகம், பத்திரிகைகளை வைத்து முதல்வர் ஆட்சியை நடத்துகிறார் சட்டம் ஒழுங்கு சீர்குலந்துள்ள நிலையில் அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது.

அதிமுக கொண்டுவந்த மக்கள் திட்டங்கள் தடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை தவறுக்கு உறுதுணையாக செல்லக்கூடிய நிலையில் கூலிப்படையை வைத்து அதிமுக தொண்டர்கள் மிரட்டப்படுகிறார்கள். நேரடியாக அதிமுகவை எதிர்த்து தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும். கோவை அமைதி பூங்கா.. இங்கே கலவரம் செய்யக் கூடாது.

ஐந்து கட்சிகளுக்கு சென்று வந்தவரை தான் திமுக சார்பில் கோவைக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளார்கள். அவரிடம் மின் வெட்டை கேட்டால், மின் தடை குறித்து பேசுகிறார் மின் துறை அமைச்சர். அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் மின்சாரம் இருந்ததால் தொழில்வளம் பெருகியிருந்த நிலையில் தற்போது பொருளாதாரம் பின் தங்கியுள்ளது

சட்டத்திற்கு குந்தகம் ஏற்பட்டால் அதிமுக அதை சரி செய்யும். சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு கொடுப்பதாக சொன்ன 1000 ரூபாய், மாதந்தோறும் சமையல் எரிவாயுவிற்கு 100 ரூபாய், கல்விக்கடன் ரத்து செய்யப்படாதது, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

அதேபோல் 2010 ஆம் ஆண்டு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதை முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். நீட் தேர்வு தொடர்பாக விவாதம் செய்ய நான் தயார் என பேசிய அவர், நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை அளித்து நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ், திமுக தான்” என விமர்சனம் செய்தார்.