சட்டசபையில் குடிநீர் பிரச்னை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.
66 சதவீத பருவமழை பொய்த்தும் குடிநீர் பிரச்னை தீர எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்றும் குடிமராமத்துப் பணிகளும் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஸ்டாலின் தமிழக அரசினை விமர்சித்துள்ளார்.
குடிநீர் பிரச்னை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த பின்னர் பேசிய ஸ்டாலின், “2020 இல் நிலத்தடி நீர் இல்லாத மாநகரமாக சென்னை இருக்கும் என நிதி ஆயோக் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை வந்துவிட்டது. நிதி ஆயோக் அறிக்கையை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை. சென்னைக்கு நீர் ஆதாரமான 4 ஏரிகளும் வறண்டுள்ளன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துள்ளது” என்று கூறினார்.
மேலும், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் வரவேற்கத்தக்கது என்றும் ஸ்டாலின் பாராட்டினார்.