டிரெண்டிங்

ரயில்வே தேர்வில் தமிழை புறக்கணிப்பதா ? - ஸ்டாலின் கண்டனம்

ரயில்வே தேர்வில் தமிழை புறக்கணிப்பதா ? - ஸ்டாலின் கண்டனம்

rajakannan

தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் வம்படியாக ஈடுபட வேண்டாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்வேயில் தமிழ் மொழியை புறக்கணித்து மீண்டும் மொழிப் போராட்டத்திற்கான களம் அமைத்து தர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ரயில்வேயில் துறைசார்ந்த பொதுப் போட்டித் தேர்வை இந்தி, ஆங்கிலத்தில் நடத்தும் முடிவுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கேள்வித்தாள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என உரிமைகோர முடியாது என அறிவித்துள்ளது அதிர்ச்சி தருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.