டிரெண்டிங்

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் பெயர் அறிவிப்பு

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் பெயர் அறிவிப்பு

Rasus

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய நேர்காணல் நடைபெற்றது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக நா.புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

66 வயதாகும் புகழேந்தி, திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக உள்ளார். 3 முறை விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.