டிரெண்டிங்

தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் ஐடியா கேட்கும் திமுக..!

தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் ஐடியா கேட்கும் திமுக..!

Rasus

திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு தங்களது ஐடியாக்களையும் அனுப்பலாம் என பொதுமக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 இடங்கள், புதுச்சேரியில் 1 இடம் என மொத்தமாக 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்று திமுக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதனிடையே திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியையும் அக்கட்சி விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக மக்களின் ஐடியாக்களையும் அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ நம் தமிழ்நாடு குறித்து ஏதேனும் கனவு மற்றும் ஐடியாக்கள் உங்களிடம் உள்ளதா..? திமுக தேர்தல் அறிக்கையின் ஒருபகுதியாக நீங்கள் இருக்க விரும்புகிறீர்களா..? அப்படியென்றால் உங்களது ஐடியாக்களை dmkmanifesto2019@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.