டிரெண்டிங்

திமுக மா.செ. கூட்டத்தில் ஸ்டாலினுக்கு பாராட்டு!

webteam

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன் மற்றும் 56 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். 

இந்தக் கூட்டத்தில், முரசொலி பவள விழாவை சிறப்பாக நடத்தியதற்காக முக ஸ்டாலினுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. முரசொலியின் சந்தாவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இயற்கை நீர்வளப் பாதுகாப்பு அமைப்பு சார்பில், வரும் 16ஆம் தேதியன்று நடைபெற உள்ள விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் கலந்துகொள்ள வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.