டிரெண்டிங்

சொத்து மதிப்பு ரூ.211 கோடி... தமிழகத்தின் 'செல்வந்த' வேட்பாளர் எம்.கே.மோகன்!

webteam

சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகனின் சொத்து மதிப்பு 211 கோடி ரூபாய் என்பது தெரிய வந்துள்ளது.இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் அதிக சொத்துகளை கொண்டவர் எம்.கே.மோகன்தான். எம்.கே.மோகன் மற்றும் அவரது மனைவி பெயரில், 4 கோடியே 18 லட்சத்து 46 ஆயிரத்து 663 ரூபாய் அசையும் சொத்துகள் உள்ளன. 207 கோடியே 2 லட்சத்து 53 ஆயிரத்து 180 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது. மொத்தமாக எம்.கே.மோகனின் சொத்து மதிப்பு 211 கோடியே 20 லட்சத்து 99ஆயிரத்து 843 ரூபாயாக உள்ளது.