பேரறிவாளனுக்கு பரோல் வழங்கிய விவகாரத்தில் திருநாவுக்கரசர் திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்த பின் பதில் சொல்ல வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய தமிழிசை இவ்வாறு தெரிவித்தார். பேரறிவாளன் பரோல் குறித்து காங்கிரசும் திமுகவும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் தமிழிசை இவ்வாறு தெரிவித்துள்ளார்.