புதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் மற்றும் பிற கட்சிகள் 2 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
30 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய புதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. 2016 சட்டமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. அந்தத் தேர்தலை ஒப்பிடும்போது தற்போது காங்கிரஸ் கிட்டத்தட்ட 6 தொகுதிகள் குறைவாகப் போட்டியிடுகிறது.