டிரெண்டிங்

திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய தயார்: ஸ்டாலின் அதிரடி

rajakannan

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலண்மை வாரியம் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் மாலை 3.30 மணியளவில் தொடங்கியது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வலியுறுத்தி முதலமைச்சர் பழனிச்சாமி தீர்மானத்தை முன்மொழிந்தார். 

பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், “மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் உள்நோக்கத்தை தனக்கு சாதகமாக மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறது. தமிழக எம்.பி.க்களை பிரதமர் சந்திக்காதது ஜனநாயகத்திற்கு நெருக்கடியான தருணம். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாகும். நீட் உள்ளிட்ட விவகாரங்களில் பேரவையின் தீர்மானத்தை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய தயார்” என்று கூறினார்.

இதனையடுத்து, காவிரி மேலாண்மை தொடர்பான தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றபம் செய்யப்படவுள்ளது.