டிரெண்டிங்

செயற்குழுக் கூட்டம் - திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

செயற்குழுக் கூட்டம் - திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

rajakannan

வரும் 14ம் தேதி திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் கூடவுள்ளதை முன்னிட்டு முக்கிய நிர்வாகிகளுடன் செயல் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். கருணாநிதி மறைவை அடுத்து, திமுகவின் அவசரக் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்தச் செயற்குழு கூட்டத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

   \

கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக வரும் 14ம் தேதி திமுக அவசர செயற்குழுக் கூட்டம் கூடவுள்ளது. இதில் பேசப்படவேண்டிய அம்சங்கள் குறித்து நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.