சேலம் மாநகராட்சி 13 வது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி 60 வார்டுகளை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டல அலுவலகங்களிலும் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாநகராட்சி 13 வது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாராயணன் கழுத்து நிறைய ஆபரணங்களை அணிந்தபடி வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்து பலரது கவனத்தை ஈர்த்தார்.
சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கூட்டுறவு நகைக் கடனை தள்ளுபடி செய்யவில்லை என்பதை வாக்காளர்கள் இடையே உணர்த்தும் விதமாக நகைகளை அணிந்தபடி வந்து வேட்புமனுவை தாக்கல் செய்வதாக தேமுதிக வேட்பாளர் நாராயணன் தெரிவித்தார்.