தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
மக்களுக்கு விரோதமாக செயல்படும் தமிழக அரசு தொடர வேண்டுமா அல்லது ஆட்சியைக் கலைக்க வேண்டுமா என்பது குறித்து ஆளுநர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழகத்தில் மக்கள் நலனுக்கு எதிராக அரசு செயல்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசு, மத்திய அரசுக்கு கண்டனங்களை தெரிவிக்கிறேன். மக்களின் ஆதரவு இல்லாமல் எந்தத் திட்டமும் வெற்றி அடையாது” என்றும் விஜயகாந்த கூறியுள்ளார்.