டிரெண்டிங்

மக்களுக்கு பாதிப்பில்லாமல் நடவடிக்கை: விஜயகாந்த் கோரிக்கை

மக்களுக்கு பாதிப்பில்லாமல் நடவடிக்கை: விஜயகாந்த் கோரிக்கை

rajakannan

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்ட விவகாரத்தில் மக்களுக்கு பாதிப்பில்லாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

ஊதிய உயர்வு காரணமாக, தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடிப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில்  போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மூலம் பேருந்துகளை இயக்கி மக்களின் பாதிப்பை குறைத்து வருவதாக, அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், மக்களுக்கு பிரச்னை இல்லாமல் சுமூக தீர்வு காணுமாறு தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனையை, தொழிற்சங்கங்களும், அரசு நிர்வாகமும், பொதுமக்கள் பாதிப்பை மனதில் கொண்டு உடனடியாக சுமூக உடன்பாடு ஏற்படுத்தி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.