மருத்துவ பரிசோதனைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் செல்ல உள்ளார்.
இதுகுறித்து அந்த கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்கு விஜயகாந்த் சிங்கப்பூர் செல்வது வழக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆண்டும் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஒருவாரத்திற்குள் சிங்கப்பூர் செல்லவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டு தொடக்கத்திலும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் 1 மாத காலம் விஜயகாந்த் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.