டிரெண்டிங்

தேமுதிக நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் தேர்வு

தேமுதிக நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் தேர்வு

webteam

தேமுதிகவின் நிரந்தர பொதுச்செயலாளராக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேமுகவின் 12ஆவது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்தும், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் விஜயகாந்தை தேமுதிகவின் நிரந்தர பொதுச்செயலாளராக நியமித்து அனைத்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் ஒரு மனதாக தேர்வு செய்தனர். அத்துடன் பிரேமலதா விஜயகாந்தின் சகோதரர் சுதீஷ் உட்பட 4 பேர் தேமுதிகவின் துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.