டிரெண்டிங்

திமுக கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கலந்துக்கொள்வார்கள் - திவாகரன்

திமுக கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கலந்துக்கொள்வார்கள் - திவாகரன்

webteam

நீட் தேர்வு குறித்து நாளை திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள் என்று திவாகரன் தெரிவித்துள்ளார். 

சசிகலா சகோதரர் திவாகரன் அளித்த பேட்டியில், "நீட் தேர்வு குறித்து நாளை திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள். மக்கள் நலன் கருதி இந்த கூட்டத்தில் அவர்கள் பங்கேற்பார்கள். நீட் தேர்வு விவகாரம், அனிதா தற்கொலை குறித்த விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்" எனக் கூறினார். திவாகரனின் இந்த பேட்டி அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திவாகரனின் கூறிய கருத்திற்கு, தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.