டிரெண்டிங்

திமுகவோடு கூட்டு சேர்ந்தோம் என்பதற்கு என்ன ஆதாரம் ? - தினகரன் தரப்பு வாதம்

webteam

தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் தனது வாதங்களை முன்வைத்து வருகிறார். ”சபாநாயகரின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது மட்டுமல்லாமல், உள்நோக்கம் கொண்டது என்றும் எங்களுடன் சேர்ந்து கவர்னரிடம் மனு கொடுத்த ஜக்கையனுக்கு இரு முடிவு, எங்களுக்கு ஒரு முடிவு என சபாநாயகர் எடுத்துள்ளார்” என்றும் பி.எஸ்.ராமன் தெரிவித்துள்ளார். மேலும் சபாநாயகர் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என நீதிபதி சுந்தர் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், தலைமை நீதிபதி அமர்வின் மாறுப்பட்ட தீர்ப்பில் உள்ள மாறுபட்ட கருத்துக்களில் மட்டும் மூன்றாவது நீதிபதி முடிவெடுத்தால் போதுமென உச்ச நீதிமன்றம் அறுவுறுத்தியுள்ளது என்றும் வாதிட்டு வருகிறார். 

”முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பது தொடர்பாக உள்கட்சியை அணுகவில்லை என முதல்வர் தரப்பில் சபாநாயகரிடம் பதிலளிக்கப்பட்டது , அந்த பதிலின் நகலை எங்களுக்கு வழங்கியிருந்தால் பதில் அளித்திருப்போம், சபாநாயகர் முன்னிலையில் முறையாக தாக்கல் செய்யப்படாத நிலையில் இந்த தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டு வரும் ராமன்,  திமுக-வுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டோம் என்பதற்கும் எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று கூறினர். மேலும்  நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் கோரிய நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை , ஆனால் எந்த ஆவணங்களும் இல்லாமல் எங்கல் மீதும் நடவடிக்கை என்பது உள்நோக்கமுடையது எனவும் ராமன் தனது வாதத்தில் தெரிவித்துள்ளார்.