டிரெண்டிங்

விஷாலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவேன் : சேரன் ஆவேசம்

விஷாலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவேன் : சேரன் ஆவேசம்

rajakannan

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக அறிவித்தது பல்வேறு தரப்பினருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. குறிப்பாக திரைத்துறையினர் பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். விஷால் தேர்தலில் போட்டியிடுவதற்கு திரையுலகில் ஆதரவும் எதிர்ப்பும் நிலவுவதாக கூறப்படுகிறது.

விஷால் அறிவிப்பை வெளியிட்டதுமே உடனடியாக தனது எதிர்ப்பை பதிவு செய்தவர் இயக்குநர் சேரன். சேரன் தனது ட்விட்டர் பதிவில், “விஷால் போட்டியிடுவதை நண்பர்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அனுமதிப்பது சரியா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் நலன் கருதி விஷால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்க வேண்டும் என்றும், இல்லையெனில் நாளை மறுநாள் முதல் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சேரன் அறிவித்துள்ளார். விஷால் இவ்வாறு செய்யவில்லை என்றால் நிறைய அசோக்குமார்களை சங்கம் சந்திக்கும் என அவர் கூறியுள்ளார்.