டிரெண்டிங்

டிஐஜி ரூபா சுய விளம்பரத்துக்காக சசிகலா மீது புகார் கூறுகிறார்: திண்டுக்கல் சீனிவாசன்

டிஐஜி ரூபா சுய விளம்பரத்துக்காக சசிகலா மீது புகார் கூறுகிறார்: திண்டுக்கல் சீனிவாசன்

webteam

சுய விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவே ‌கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா, சசிகலா மீது வீண்பழி சுமத்துவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்து‌ள்ளார். 

திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டதாக கூறும் செய்திக்கு மறுப்பு தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 100 வது ஆண்டு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 29ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு இன்று திருவண்ணாமலை செங்கம் சாலை சந்தைமேடு பகுதியில் பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், வருவாய்துறை அமைச்சர் உதயகுமார், அறநிலையதுறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கர்நாடக சிறையில் உள்ள சசிகலா சிறப்பு சலுகைக்கு ரூ.2 கோடி கொடுக்கப்பட்டதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அது பொய்யானது என்று தெரிவித்தார். சுய விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவே ‌கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா, சசிகலா மீது வீண்பழி சுமத்துவதாக குற்றம் சாட்டினார்.