டிரெண்டிங்

தினகரன் திமுகவுடன் கைகோர்த்‌துவிட்டார்: ‌அரசு கொறடா குற்றச்சாட்டு!

தினகரன் திமுகவுடன் கைகோர்த்‌துவிட்டார்: ‌அரசு கொறடா குற்றச்சாட்டு!

webteam

டிடிவி தினகரன் திமுகவுடன் கை கோர்த்துவிட்டார் என்று ‌அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அரியலூர் பேருந்து நிலையம் அருகே அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடந்த கூட்டத்தில் பேசிய கொறடா ராஜேந்திரன், திமுகவினர் எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என துடித்து கொண்டிருப்பதாகக் கூறினார். டிடிவி தினகரன் சுயநலத்துடன் சட்டப்பேரவை உறுப்பினர்களை அடைத்து வைத்து தனக்கு என்று ஒரு அணியை உருவாக்க நினைத்து செயல்பட்டு வருகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். டிடிவி தினகரன்‌, ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என சொன்னால் அவர் திமுகவுடன் கைகோர்த்து விட்டார் என்றுதான் அர்த்தம் என்றும் அவர் கூறியுள்ளார்.