டிரெண்டிங்

டிடிவி அணியில் கிளம்பிய மாறுபட்ட கருத்துகள்..!

டிடிவி அணியில் கிளம்பிய மாறுபட்ட கருத்துகள்..!

Rasus

அதிமுக கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை என டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் கூறி வந்த நிலையில், அவர்கள் தான் கூட்டத்தை புறக்கணித்தனர் என தினகரன் அணியிலுள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். இதன்மூலம் ஒரே அணியைச் சேர்ந்த இருவர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டிடிவி ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் பேசியபோது, “சட்டமன்ற குழு கூட்டம் என்றார்கள். நாங்கள் இருபது முதல் 25 எம்எல்ஏக்கள் வரை இங்கு இருக்கிறோம். எங்களுக்கு அழைப்பு வர வேண்டுமா..? கூடாதா...? நாங்கள் என்ன திமுக எம்எல்ஏக்களா..? நடவடிக்கை என்று எடுப்பார்களோ அன்று எடுத்துக் கொள்ளட்டும். ஆனால் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் என்ன..? அதிகார மமதையில் இருக்கிறார்களா..?” என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் திவாகரன் பேசியபோது, “அழைப்பு என்றால் ஒட்டுமொத்த எம்எல்ஏக்களுக்கும் தான் அழைப்பு. தனியாக பத்திரிகைகள் வைக்க மாட்டார்கள். இவர்கள் செல்லவில்லை. நாங்கள் கூட கூட்டத்திற்கு சென்றுவிட்டு வாருங்கள் என சொல்லி பார்த்தோம். ஆனால் வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டார்கள்” என்றார்.