டிரெண்டிங்

சோதனை குறித்து திண்டுக்கல் சீனிவாசன்: காலையில் ஒரு கருத்து, மாலையில் வேறு கருத்து

சோதனை குறித்து திண்டுக்கல் சீனிவாசன்: காலையில் ஒரு கருத்து, மாலையில் வேறு கருத்து

webteam

போயஸ் இல்ல வருமான வரி சோதனை குறித்து, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், காலை ஒரு கருத்தும், மாலையில் வேறு கருத்தும் கூறியுள்ளார்.

வருமான வரித்துறையினர் சட்டத்திற்கு உட்பட்டே அவர்களின் கடமையை செய்வதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று காலை பழனியில் கூறியிருந்தார். பின்னர் சிவகங்கையில் பேசிய அவர், வருமான வரித்துறை சோதனை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஆகவே கருத்துத் தெரிவிக்க இயலாது எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக பழனியில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், வருமான வரித்துறையினர் அவர்களது கடமையைச் செய்கின்றனர், அதில் ஒன்றுமில்லை. வருமான வரித்துறையினர் எங்கு வேண்டுமானாலும் சோதனை செய்யலாம், அவர்களை தடுக்க முடியாது. அவர்களுடையை பணியை செய்கின்றனர் என்று கூறினார்.