டிரெண்டிங்

உலகின் மிக அபாயமான வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம் இவ்வளவுதானா! ஷாக் தகவல்

JananiGovindhan

அலுவலகமோ, வியாபாரமோ, எந்த பணியாக இருந்தாலும் கடினமாக உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் “உனக்கென்னப்பா நல்லா சம்பாதிக்குற அதனால OT பார்ப்ப” என கூறுவது இயல்பானதாக இருக்கிறது.

ஆனால் இந்த முன்முடிவான பேச்சுகள் எல்லா வகையான கடினமான வேலைகளுக்கும் பொருந்தாது. இந்த உலகில் அபாயமான வேலைகளை செய்பவர்களுக்கு சொற்ப அளவில்தான் சம்பளம் வழங்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா?

அப்படியான பணியை பற்றிதான் தற்போது பார்க்கப்போகிறோம். அதன்படி உயிரை பணையம் வைத்து செய்யும் வேலைக்கு வெறும் 12 டாலர்தான் ஊதியமாக கொடுக்கப்படுகிறது என்பது தெரியுமா? அதாவது இந்திய மதிப்பில் 955 ரூபாய் மட்டுமே.

அதில் ஒரு குறிப்பிட்ட வேலை, செயலில் உள்ள எரிமலைக்குள் கந்தகச் சுரங்கத்தில் வேலை செய்வது. அதாவது சல்ஃபர் மைனிங் செய்வது. அதில் ஈடுபடும் நபர்கள் எரிமலை பகுதியில் தங்கள் உடல் எடையை கந்தகத்தை மலையில் சுமந்து கொண்டு வேலை செய்கிறார்கள்.

இந்த நச்சு வேலையில் இருப்பவர்கள் 50 வயதைத் தாண்டுவதில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான சுரங்கத் தொழிலாளர்கள் இரண்டு கூடைகளை எரிமலைக்குள் எடுத்துச் சென்றால் சுமார் 200 பவுண்டுகள் நிறைந்த கந்தகத்துடனேயே வெளியேறுகிறார்களாம்.

இந்தோனோஷியாவில் உள்ள இஜென் எரிமலை வளாகத்தில் உள்ள கலப்பு எரிமலைகளின் குழுவில்தான் இப்படியான அபாயமான வேலையில் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த எரிமலை நீல நெருப்பு, அமில பள்ளம் ஏரி மற்றும் உழைப்பு மிகுந்த கந்தகச் சுரங்கத்திற்கு நன்கு அறியப்பட்டதாகும்.

இந்தோனேசியாவில் தற்போது செயலில் உள்ள எரிமலைக்குள் கந்தகச் சுரங்கத்தைக் காணலாம். ஏன் மக்கள் இந்த கொடூராமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால் இதுதான் அந்த பகுதியில் சிறந்த ஊதியம் பெறும் வேலைகளில் ஒன்றாக இருக்கிறதாம்.

30 ஆண்டுகளாக எல்ஜென் பீடபூமியில் பணிபுரியும் சுரங்கத் தொழிலாளர்களில் ஒருவர், இன்சைடர் தளத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில், "தினமும் தோள்கள் வீங்கினால் பரவாயில்லை என்று கந்தகத்தைச் சுமந்து செல்வதை சகஜமான வேலையாக இருக்கிறது. இது ஒரு ஆபத்தான சூழ்நிலையாக இருந்தாலும், பசிக்கு பயந்து நாங்கள் இந்த வேலை செய்ய துணிகிறோம்," என்று அவர் கூறியிருக்கிறார்.

குறைந்தபட்சம் உடலில் சல்ஃபர் ஒட்டாமல் இருக்க தண்ணீரில் நனைத்த துணியை வாயில் சுற்றிக்கொள்கிறார்களால் சுரங்கத் தொழிலாளர்கள்.