டிரெண்டிங்

கோலியின் ஆர்சிபி அணியை வீழ்த்துமா தோனியின் சிஎஸ்கே - ஆடும் லெவனில் யார்? யார்?

கோலியின் ஆர்சிபி அணியை வீழ்த்துமா தோனியின் சிஎஸ்கே - ஆடும் லெவனில் யார்? யார்?

jagadeesh

ஐபிஎல் தொடரில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 15 போட்டிகளிலும், பெங்களூர் அணி ‌8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை அணி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளதால். இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் களம் காண்கிறது சிஎஸ்கே.

இந்நிலையில் இன்றையப் போட்டியில் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என புதிய தலைமுறை கணித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி

ஷேன் வாட்சன்
டூப்ளசிஸ்
அம்பத்தி ராயுடு
தோனி
ஜெகதீசன்
சாம் கரன்
பிராவோ
ரவீந்திர ஜடேஜா
தீபக் சஹார்
ஷர்துல் தாக்குர்
கரன் சர்மா

ராயல் சாலஞ்ஜர்ஸ் பெங்களூர் உத்தேச அணி

ஆரோன் பின்ச்
தேவ்தத் படிக்கல்
விராட் கோலி
டிவில்லியர்ஸ்
மொயின் அலி
ஷிவம் துபே
வாஷிங்டன் சுந்தர்
உதானா
முகமது சிராஜ்
நவ்தீப் சைனி
சஹால்