எதிரெதிர் அணியில் விளையாடினாலும் தோனி, கோலியின் நட்பை பிரிக்க முடியாது என்ற ரீதியில் புகைப்படமும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.அதன்படி பெங்களூர் அணி 13 ஓவரில் 2 விக்கெட் இழந்து 86 ரன்களுடன் விளையாடி வருகிறது.
பெங்களூர் அணியின் தொடக்க வீரர்கள் பின்ச்சும், தேவ்தத் படிக்கல்லும் ஆட்டமிழந்த நிலையில். கேப்டன் விராட் கோலியும், ஏபி டிவில்லியர்ஸூம் விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டியில் நடுவே கோலியும், தோனியும் அவ்வப்போது பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் எதிரெதிர் அணியில் விளையாடினாலும் தோனியையும் கோலியையும் பிரிக்கவே முடியாது என புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.