தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ மாணவர்களின் கல்வி உதவித் தொகையைக் குறைத்து தமிழக அரசு துரோகம் இழைத்திருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு மு.க.ஸ்டாலின், தாழ்த்தப்பட்ட, மாணவர்களின் கல்வி உதவித் தொகையைக் குறைத்து தமிழக அரசு துரோகம் இழைத்திருப்பதாகவும், அரியலூர் மாணவி அனிதா மரணத்தின் ஈரம்கூட காயாத நிலையில், தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் பொறியியல் கனவுகளை சிதைக்கும் இன்னொரு நடவடிக்கை இது என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்த உதவித் தொகை குறைப்பை உடனடியாக திரும்பப் பெறவில்லை என்றால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.