டிரெண்டிங்

கட்சியில் சீட் மறுப்பு; சுயேச்சையாக களமிறங்கும் பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ

கட்சியில் சீட் மறுப்பு; சுயேச்சையாக களமிறங்கும் பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ

webteam

சீட் வழங்காததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் முடிவு செய்துள்ளார்.

பெருந்துறை தொகுதி வேட்பாளராக தான் தேர்ந்தெடுக்கப்படுவோம் என அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு பதிலாக பெருந்துறை தொகுதி வேட்பாளராக ஜெயகுமார் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். அதற்கான வேட்புமனுவை அவர் இன்று தாக்கல் செய்ய இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டவர் ஜெயகுமார் என தோப்பு வெங்கடாசலம் குற்றம்சாட்டியுள்ளார்.