டிரெண்டிங்

தமிழகத்தில் டெங்குவின் தாக்கம் குறைந்துள்ளது: விஜயபாஸ்கர்

Rasus

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் உள்ளிட்டோரின் உடல் நலம் குறித்து அவர் கேட்டறிந்தார். அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காய்ச்சல் ஏற்பட்டால் சுய மருத்துவம் பார்க்காமல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார். குழந்தைகள் என்றால் ஒரு வாரமும், பெரியோர் என்றால் ஐந்து நாட்களும் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். மேலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.