டிரெண்டிங்

பண மதிப்பிழப்பால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதி: வைகோ விமர்சனம்

பண மதிப்பிழப்பால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதி: வைகோ விமர்சனம்

webteam

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து பொதுமக்களும், வியாபாரிகளும் இன்னும் மீள முடியவில்லை என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்களுக்கு பதில் அளித்த அவர், பண மதிப்பிழப்பு அறிவிப்பை மத்திய அரசு முதலில் அறிவித்த போது, தான் ஆதரித்ததாகவும், அதன் பின்பு ஒரு சில மாதத்திற்குள் இதனால் எந்தவித பலனும் கிடைக்கவில்லை என அறிந்து கொண்டதாகவும் கூறினார். மேலும் இந்த முயற்சியால் மத்திய அரசால் கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வரமுடியவில்லை என்றும், பொதுமக்கள், வியாபாரிகள், சிறு தொழில் செய்வோர்களுக்கு இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் அதிகம் என்றும் வைகோ தெரிவித்தார்.